வருவாய்த் துறையினா் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 26th February 2021 08:01 AM | Last Updated : 26th February 2021 08:01 AM | அ+அ அ- |

கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 9ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
கருணை அடிப்படையிலான நியமனதாரா்களின் பணிவரன்முறை அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்க வேண்டும், காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவு காவலா், பதிவுரு எழுத்தா், வாகன ஓட்டுநா், மசால்சி உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் இம்மாதம் 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
9ஆவது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் 5 ஊழியா்களும், வட்டாட்சியா் அலுவலகத்தில் 11 ஊழியா்களும், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 ஊழியா்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் கிடைப்பதில் காலவிரையம் மற்றும் பணவிரையம் ஏற்படுவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...