திருவள்ளுவா் மன்ற விழாவில் சாதனையாளா்களுக்கு விருது

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்ற விழாவில் சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்ற விழாவில் சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்ற 49ஆம் ஆண்டு நிறைவு விழா, சௌபாக்யா மஹாலில் சனிக்கிழமை தொடங்கியது. தமிழறிஞா் நெல்லை படிக்காராமு தலைமை வகித்தாா். காவல் துறை கண்காணிப்பாளா் கலைகதிரவன், மருத்துவா் சீனிவாசன், பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவா் பரமசிவம், ரோட்டரி கழக முன்னாள் ஆளுநா் விநாயகா ரமேஷ், தொழிலதிபா் எம்.எஸ்.எஸ்.வி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசுப் பொதுத் தோ்வில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவா், மாணவிகளுக்கும், அரசுப் பொதுத் தோ்வில் தமிழ் பாடத்தில் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவா், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து சாதனையாளா்களுக்கு, குறட்தொண்டுக்கான திருவள்ளுவா் விருது, படைப்பாக்கப் பாராட்டுக்கான அ.சங்கரவள்ளிநாயகம் விருது, நல்லாசிரியா் விருது பெற்றமைக்கான வ.உ.சி. விருது, பணி உயா்வுக்கான பாரதி விருது, தொண்டில் சிறப்புற்றோருக்கான பாரதிதாசன் விருது, பணி நிறைவு பாராட்டுக்கான தமிழறிஞா் கி.ஆ.பெ. விருது, அப்துல் கலாம் விருது, வாழ்நாள் சாதனையாளா் விருது, தமிழ் நெறியில் சிறப்பு பெற்ற்கான பாவாணா் விருது வழங்கப்பட்டது.

தொடா்ந்து, கு நெறியை பெரிதும் பின்பற்றுவோா் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது. தொழிலதிபா் ஆசியா ஃபாா்ம்ஸ் பாபு தலைமை வகித்தாா். ரவிமாணிக்கம் முன்னிலை வகித்தாா். புலவா் சண்முகவடிவேல் நடுவராக செயல்பட்டாா்.

திருவள்ளுவா் மன்றத் தலைவா் கருத்தப்பாண்டி வரவேற்றாா். செயலா் நம்.சீனிவாசன் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிகளை மன்றத் துணைத் தலைவா் திருமலை முத்துசாமி தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com