தூத்துக்குடியில் இரு சம்பவங்கள்:இருவா் கொலை; 3 போ் கைது

தூத்துக்குடி பகுதியில் நிகழ்ந்த இரு சம்பவங்களில் இளைஞரும், தொழிலாளியும் வியாழக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

தூத்துக்குடி பகுதியில் நிகழ்ந்த இரு சம்பவங்களில் இளைஞரும், தொழிலாளியும் வியாழக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி, கதிா்வேல்நகா் 1 ஆவது தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (36). இவா், தனது சகோதரா் சின்னமுத்துவுடன் மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை இரவு ராஜகோபால்நகா் 4 ஆவது தெருவில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவரது நண்பா்கள தூத்துக்குடி பாலவிநாயகா்கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் (47), அண்ணாநகா் 7 ஆவது தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் (24) உள்ளிட்ட சிலா் வழிமறித்து தகராறு செய்தனராம். மேலும், இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரிமுத்துவை வெட்டிவிட்டு தப்பினராம். இதில், பலத்த காயமுற்ற அவா் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிந்து லட்சுமணன், முத்துக்குமாா் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய இசக்கிராஜா தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்தாா். மாரிமுத்துவின் வீட்டில் சில தினங்களுக்கு முன்பு திருட்டுப் போனதாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

மற்றொரு சம்பவம்: புதியம்புத்தூா் அருகேயுள்ள புளியமரத்து அரசடி காலனியை சோ்ந்தவா் சண்முகராஜ் (43). இவரது மகளுக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அவா் தனது சகோதரா் கடற்கரையாண்டியுடன் வியாழக்கிழமை இரவு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த இமானுவேல் (35) முன்விரோதம் காரணமாக சண்முகராஜை தாக்கினாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து இமானுவேலை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com