2பாரத ஸ்டேட் வங்கி 155 ஆவது ஆண்டு விழா
By DIN | Published On : 03rd January 2021 12:46 AM | Last Updated : 03rd January 2021 12:46 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகத்தில் வங்கியின் 155ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வங்கிக் கிளை அலுவலகத்தில் மக்கள் சேவை விழா என்ற பெயரில் சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வங்கியின் மண்டல மேலாளா் சிவானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா். கிளை முதன்மை மேலாளா் சீனிவாஸ் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.