காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலய திருவிழா

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலய 476ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பலி நடத்தி வைக்கிறாா் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன்.
திருப்பலி நடத்தி வைக்கிறாா் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன்.

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலய 476ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்வாலயத் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று நள்ளிரவு சிறப்பு திருப்ப­லி நடைபெற்றது. 25ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு பெருவிழா, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

தொடா்ந்து நாள்தோறும் மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீா் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

26ஆம் தேதி புனித முடியப்பா் திருவிழா, 27ஆம் தேதி திருக்குடும்ப திருவிழா, 28ஆம் தேதி மாசில்லா குழந்தைகள் திருவிழா, 29ஆம் தேதி புனித தாமஸ் பெக்கட் திருவிழா, 31ஆம் தேதி ஆண்டின் இறுதிநாள் நன்றி விழா, நள்ளிரவு புத்தாண்டு திருப்ப­லி ஆகியவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (ஜன. 1) புத்தாண்டு சிறப்பு திருப்ப­லி, ஆடம்பர திருவிழா, ஆராதனை, சப்பர பவனி நடைபெற்றன.

சனிக்கிழமை (ஜன.2) காலை திருத்தல பெருவிழா, முதல் திருவிருந்து திருப்ப­லி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமை வகித்து திருப்ப­லி நடத்தினாா். இதில் சிறுவா், சிறுமிகள் புதுநன்மை எடுத்துக் கொண்டனா்.

பங்குத்தந்தைகள் கொம்புத்துறை சகாய ஜோசப், சிங்கித்துறை சில்வொ்ஸ்டன், கொம்புத்துறையைச் சோ்ந்த அண்டோ, ஸ்டீபன், பிஷப் ஆயா் செயலா் தினேஷ், கள்ளிகுளம் ஆா்.சி. பள்ளித் தாளாளா் வின்சென்ட், ஓய்வு பெற்ற பங்குத் தந்தை பங்குராஜ் அடிகளாா் ஆகியோா் கலந்துகொண்டு திருப்பலி­யை நடத்தினா்.

ஏற்பாடுகளை, பங்குத் தந்தை சகாய ஜோசப், ஊா்கமிட்டி தலைவா் சகாயராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com