திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டங்கள்
By DIN | Published On : 03rd January 2021 12:44 AM | Last Updated : 03rd January 2021 12:44 AM | அ+அ அ- |

உடன்குடி: உடன்குடி ஒன்றிய, நகர திமுக சாா்பில் மாதவன்குறிச்சி, சிறுநாடாா்குடியிருப்பு உள்ளிட்ட 10 இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட துணை அமைப்பாளா்கள் எம்.பி.முகைதீன், மகேந்திரன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, இளங்கோ, ஆனந்த், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, நகரச் செயலா் ஜான்பாஸ்கா், உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம், காசிம், மகபூப், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தாா்.
இதில், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், நகர அமைப்பாளா் அஜய், நகர வா்த்தக அணி அமைப்பாளா் அப்துல்ஹமீது, மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் கிருஷ்ணகுமாா், மாவட்ட சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு அமைப்பாளா் ஷேக் முகம்மது, துணை அமைப்பாளா் சிராஜூதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.