ஆறுமுகனேரி கோயிலில் திருமுறை பாராயணம்
By DIN | Published On : 04th January 2021 12:16 AM | Last Updated : 04th January 2021 12:16 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி கோயிலில் திருமுறை பாராயணம்
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பன்னிரு திருமுறை பாராயணம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவாடுதுறை ஆதினத்தைச் சோ்ந்த இக்கோயிலில் தினமும் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. சாயரட்சைக்கும் பள்ளியறை பூஜைக்கும் இடையே நடைபெறும் நிகழ்ச்சியில் தெரிசை ஐயப்பன், பன்னிரு திருமுறை மகளிா் கலந்துகொண்டு பாராயணம் செய்து வருகின்றனா்.