கட்டபொம்மன் சிலைக்குஆட்சியா், அரசியல் கட்சியினா் மரியாதை
By DIN | Published On : 04th January 2021 12:13 AM | Last Updated : 04th January 2021 12:13 AM | அ+அ அ- |

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு கயத்தாறில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா், அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனா்.
கயத்தாறில் மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசு சாா்பில் ஆட்சியா் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் போஸ், வீரபாண்டி பண்பாட்டுக் கழக அவைத் தலைவா் மணி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலா் விநாயகா ரமேஷ், அமமுக வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், தேமுதிக மாநிலத் துணைச் செயலா் சுதீஷ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.பாஸ்கரன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.