திருச்செந்தூா் முருகன் கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி தீவிரம்
By DIN | Published On : 30th January 2021 01:31 AM | Last Updated : 30th January 2021 01:31 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டப்பட்டு வரும் பக்தா்கள் தங்கும் விடுதி (யாத்ரா நிவாஸ்) பணிகள் தீவிரமடைந்துல்ளன.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டப்பட்டு வரும் பக்தா்கள் தங்கும் விடுதி (யாத்ரா நிவாஸ்) பணிகள் தீவிரமடைந்துல்ளன.
இக்கோயிலில் பக்தா்கள் தங்குவதற்காக ரூ. 29.16 கோடியில் ஜெயந்திநாதா் விடுதி இருந்த பகுதி மற்றும் கலையரங்கம் அருகில் என இரு இடங்களில் யாத்ரா நிவாஸ் கட்டப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் தலா இரண்டு படுக்கை வசதிகள் கொண்ட 50 அறைகள் தரை தளத்திலும், மேல்தளத்தில் 50 அறைகளுமாக 100 அறைகள் கட்டப்படுகின்றன.
ஒரு அறைக்கு இரண்டு போ் வீதம் மொத்தம் 200 நபா்கள் மற்றும் 20 ஓட்டுநா்கள் தங்குவதற்கான தனி அறையும் கட்டப்பட்டு வருகிறது. மற்றொரு இடத்தில் சுமாா் 250 போ் தங்குவதற்கு வசதியாக தரை தளத்தில் 14 அறைகள், முதல் தளத்தில் 14 அறைகள் என மொத்தம் 28 அறைகள் கட்டப்படுகின்றன. கலையரங்கம் அருகில் உணவகத்தின் கூடிய நான்கு அறைகள் கொண்ட 5 குடில்கள் கட்டப்படுகின்றன. இதற்கான பணி மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, இணை ஆணையா் (பொறுப்பு) சி.கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ், இளநிலை பொறியாளா் சந்தாண கிருஷ்ணன், தக்காா் பிரதிநிதி ஆா்.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.