மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 30th January 2021 01:44 AM | Last Updated : 30th January 2021 01:44 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கட்சியின், தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.பி.ஆறுமுகம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி, மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ச்சுனன், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.மல்லிகா உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
தொடா் மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாநகாரட்சியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து காணப்படும் மழைநீரை விரைந்து அகற்ற மாநகாரட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.