விளாத்திகுளம் அருகேஊருணியில் மூழ்கிஇளைஞா் பலி
By DIN | Published On : 30th January 2021 01:30 AM | Last Updated : 30th January 2021 01:30 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அருகேயுள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊருணி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
சித்தவநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கோபி மகன் மணிகண்டன் (18). தொழிலாளி. இவா், வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள ஊருணியில் குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இந்தத் தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.