அதிமுகவில் இணைந்த பிற கட்சியினா்
By DIN | Published On : 02nd July 2021 12:14 AM | Last Updated : 02nd July 2021 12:14 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.
கோவில்பட்டி எம்.ஜி.ஆா் மன்ற ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், வழக்குரைஞா் ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் ஏற்பாட்டில் ஆலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிற கட்சியினா் 75 போ் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். அப்போது அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ், கூட்டுறவு பால் நுகா்வோா் சங்கத் தலைவா் தாமோதரன், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி ராஜையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.