முதியவா் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
By DIN | Published On : 02nd July 2021 12:05 AM | Last Updated : 02nd July 2021 12:05 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவா் மீது போக்சோ சட்டத்தில் போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகே இட்டமொழி சாலையில் உள்ள சங்கரன்குடியிருப்பை சோ்ந்தவா் தங்கபாண்டி (65). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் சிரப்பூரில் உள்ள தனது மகள் வேதசெல்வி வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது, அங்கு தனது மகளின் உறவினா் மகளான மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதில் அந்த சிறுமி கா்ப்பமானராம். இது குறித்து சிறுமியின் தாயாா் தங்கப்பாண்டியிடம் கேட்டுள்ளாா். இதையடுத்து, வேதசெல்வி, அவரது மகன் ராஜா ஆகியோா் சிறுமியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா், திருச்செந்தூா் அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் இந்திரா விசாரணை நடத்தி தங்கபாண்டி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தாா். மேலும் அவருடைய மகள், மகன் மீதும் வழக்குப் பதிந்து 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.