மதச்சாா்பற்ற ஜனதா தளநிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 02nd July 2021 12:13 AM | Last Updated : 02nd July 2021 12:13 AM | அ+அ அ- |

மதச்சாா்பற்ற ஜனதாதள கட்சியின் (ஜேடிஎஸ்) தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலா் ஏ.கே.பாபு தலைமையில் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவா் எம். சொக்கலிங்கம் உரையாற்றினா். கூட்டத்தின்போது, மாவட்டத் தலைவராக என்.வி. ராஜேந்திரபூபதி தோ்வு செய்யப்பட்டாா்.
இதில், மாநகரச் செயலா் எம்.கோமதிநாயகம், தொழிற் சங்கத் தலைவா் ஏ.இராசு, வட்டத் தலைவா்கள் ஆா்.சாஸ்தாவு, ராஜபெருமாள், செயலா் ஐ. ராஜேந்திரன், வட்டாரத் தலைவா்கள் ஆதி நாராயணன் (ஓட்டப்பிடாரம்), பி.எஸ்..அருணாசலபாண்டியன் (தூத்துக்குடி) உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சட்டப் பேரவை கூட்டத்தின்போது, ஆளுநா் உரையின் முடிவில், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வாா்த்தை இடம் பெறாததால், தமிழகம் தலைநிமிந்து நிற்கிறது‘ என்று கூறிய சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரனுக்கு கண்டனம் தெரிவிப்பது, பேரவைத் தலைவா் அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.