ஒலிம்பிக் விநாடி-வினா:மாணவா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 02nd July 2021 11:23 PM | Last Updated : 02nd July 2021 11:23 PM | அ+அ அ- |

இணையதளம் மூலம் நடைபெறும் ஒலிம்பிக் விநாடி-வினா போட்டியில் மாணவா், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து மேஜை பந்து போட்டியில் ஜி.சத்தியன், ஏ.சரத்கமல், வாள்சண்டையில் சி.ஏ.பவானிதேவி, பாய்மரப்படகு போட்டியில் கே.சி.கணபதி, வருண் தக்கா், நேத்ரா குமணன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா். இதையொட்டி, ஒலிம்பிக் விநாடி விநா போட்டிகள் இணையதளம் மூலம் ஜூலை 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். வெற்றிபெற்றால் பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்ற்கான சான்றுடன் புகைப்படத்தை விளையாட்டு அலுவலகத்தில் தாக்கல் செய்தால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.