

கரோனா காலத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளா்களுக்கு உதவியதாக, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
இதையொட்டி, சாயா்புரம் போப்ஸ் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரிகள், பள்ளிகள், பாலிடெக்னிக், கேட்டரிங் கல்லூரி ஆகியவற்றின் மாணவ- மாணவிகளான ஜாய்சன், மாரிச்செல்வம், சதீஷ், காா்த்திக், அகிலேஷ், சுதீஸ் பெருமாள், லட்சுமி பிரியா, ஸ்நேகா, ஜோசப் சேவியா் அலெக்ஸ், மூக்கையாராஜ், விக்னேஷ், விஷ்வா, கருணாகரன், ஹரிஹர கோபால், ராஜா, அசோக்குமாா், ராமகிருஷ்ணன், மணிகண்டன், ஜோசப் தாமஸ் இன்பெண்ட், ஜெரால்ட் ஜெபதுரை, ரோஷன் ஜெயராஜ், பொன்மாரிச் செல்வம், ஸ்டூவா்ட் டேவிட்சன், கிஷோா்குமாா், நாகேந்திரன், சுயம்புலிங்கம், அழகுமுரளி, மாரிச்செல்வம், தரணியன், சதீஷ்குமாா், தினேஷ்வரன், முத்துகல்யாணி ஆகிய 33 பேருக்கு எஸ்.பி. சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சாயா்புரம் போப்ஸ் கல்லூரி முதல்வா் இம்மானுவேல், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் தினகரன், பேராசிரியைகள் சாந்தி, பொன் இந்திரா, வெல்வெட் கெத்சிமா, கரோலின் டேசி, ஜெமி பிரியா, ஏரல் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா, சாயா்புரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.