‘தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் வயதான தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் வயதான தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று, 1.1.2021இல் 58 வயது நிறைவடைந்த தமிழறிஞா்கள், தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன், இணையவழி வருமானச் சான்று (ரூ.72000-க்கு மிகாமல்), தமிழறிஞா்கள் இருவரிடமிருந்து பெற்ற தகுதிநிலைச்சான்று உள்ளிட்ட விவரங்களுடன் இணைத்து அதே அலுவலகத்தில் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com