கோவில்பட்டி, கழுகுமலையில் 37 மதுக்டைகள் நாளை மூட ல்
By DIN | Published On : 09th July 2021 11:33 PM | Last Updated : 09th July 2021 11:33 PM | அ+அ அ- |

கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் 37 மதுக்கடைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) மூட வேண்டும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கயத்தாறு வட்டம், கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துகோனின் 311-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளது. எனவே, கழுகுமலை- கோவில்பட்டி; கயத்தாறு- கோவில்பட்டி வழித்தடங்களில் உள்ள 37 டாஸ்மாக் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அன்றைய தினம் மட்டும் மூடப்பட வேண்டும். விதிமீறி மதுக்கடைகள் திறக்கப்பட்டாலோ அல்லது மதுபானத்தை கடத்துதல், பதுக்குதல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபா்கள் மீது மதுவிலக்கு அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.