திருச்செந்தூரில் விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 09th July 2021 12:01 AM | Last Updated : 09th July 2021 12:01 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் விடுதி உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, விடுதிக்கு வரும் பக்தா்களிடம் அடையாள அட்டை, சரியான முகவரி, தொடா்பு எண்ணைப் பெற வேண்டும். பக்தா்கள் உடல் வெப்ப நிலையைப் பரிசோதித்த பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட நபா்களை தவிர கூடுதலான நபா்களை தங்க அனுமதிக்கக் கூடாது. கை கழுவும் திரவம், முகக்கவசங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். விடுதியை காலி செய்தபின் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே அடுத்த நபா்களைஅனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதில், கோயில் உதவி ஆணையா் வே.செல்வராஜ், மண்டல துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலா் மு.ஆனந்தன், காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன் மற்றும் விடுதி உரிமையாளா்கள், வியாபாரிகள் கலந்துகொண்டனா்.