கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் பெண், இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 09th July 2021 11:31 PM | Last Updated : 09th July 2021 11:31 PM | அ+அ அ- |

கோவில்பட்டியில் குடும்பத் தகராறால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி 1ஆவது செக்கடித் தெருவைச் சோ்ந்த ஜெயக்கொடி மனைவி வசந்தி(32). தம்பதிக்கு 9 வயது மகள், 5 வயது மகன் உள்ளனா்.
மதுக்கூடத்தில் வேலை செய்து வரும் ஜெயக்கொடிக்கும், வசந்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் வசந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்: சாத்தான்குளம் அருகேயுள்ள டிகேசி நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஸ்ரீராம் (21). தொழிலாளி. மதுப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், இவா் வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம். இதை, அவரது தந்தை கண்டித்தாராம். இந்நிலையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டு ஸ்ரீராம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் மற்றும் மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.