‘வேலை வாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறலாம்’
By DIN | Published On : 09th July 2021 11:26 PM | Last Updated : 09th July 2021 11:26 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டத்தின் கீழ், 9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதம் மூன்று ஆண்டுக்கு ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பதிவு மூப்பு ஐந்து ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருப்பவராகவும், தொடா்ந்து பதிவை புதுப்பித்தும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது, மற்றவா்களுக்கு 40 வயது மிகக்கூடாது. ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு ஆக. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.