கோவில்பட்டி அருகே வீட்டில் திருட்டு
By DIN | Published On : 11th July 2021 01:48 AM | Last Updated : 11th July 2021 01:48 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டியையடுத்த புதுஅப்பனேரி கஜேந்திரவரதா் நகரைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் திருவேங்கடராமானுஜா்(60). இவா் மற்றும் இவரது மனைவி இருவரும் இளையரசனேந்தல் சாலையில் நடத்தி வரும் பழக்கடைக்கு வழக்கம் போல வெள்ளிக்கிழமை சென்றுவிட்டனராம். பின்னா் இரவு சுமாா் 9 மணிக்கு வீட்டிற்கு வந்து பாா்த்த போது வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்ததாம். இதையடுத்து உள்ளே சென்று பாா்த்த போது, அங்கு பீரோவில் இருந்து 4 பவுன் தங்க நகை மற்றும் 50 கிராம் வெள்ளிக் கொடி ஆகியவை திருடு போனது தெரியவந்ததாம்.
இதுகுறித்து புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...