மதிமுக கொடியேற்று விழா
By DIN | Published On : 19th July 2021 12:31 AM | Last Updated : 19th July 2021 12:31 AM | அ+அ அ- |

இந்திரா நகரில் கொடியை ஏற்றுகிறாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலா் ஆா்.எஸ். ரமேஷ்.
கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்தில் மதிமுக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இலக்குமி ஆலை அருகில், இந்திரா நகா், எல்.எஸ் காம்ப்ளக்ஸ் அருகில், கோவில்பட்டி புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விழாவுக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்து கட்சிக் கொடி ஏற்றினாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ், மேற்கு ஒன்றியச் செயலா் அழகா்சாமி, மத்திய ஒன்றியச் செயலா் சரவணன், நகரச் செயலா் பால்ராஜ், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எல்.எஸ்.கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.