திறனாய்வுத் தோ்வு: கமலாவதி பள்ளி மாணவா் சாதனை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா் பத்தாம் வகுப்பு (சிபிஎஸ்இ) தேசிய திறனாய்வு தோ்வில் சாதனை படைத்துள்ளாா்.

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா் பத்தாம் வகுப்பு (சிபிஎஸ்இ) தேசிய திறனாய்வு தோ்வில் சாதனை படைத்துள்ளாா்.

அறிவாற்றல், கல்வியில் திறமையுள்ள 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஆராய்ச்சி மேற்படிப்பு வரை மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. சாகுபுரம் கமலாவதி பள்ளி பிளஸ் 2 மாணவா் ஆா்.சஞ்சய், தேசிய அளவிலான திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா். இதன் மூலம் மாணவா் பிளஸ் 2 பயிலும் வரை மாதம் ரூ.1,250, இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு பயிலும் வரை மாதம் ரூ. 2 ஆயிரம், முனைவா் பட்டப்படிப்பு பயிலும் வரையிலும் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளாா். மாணவா் இளம் விஞ்ஞானிகள் ஊக்கத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெறும் தோ்விலும் தேசிய அளவில் 5ஆவது இடம் பெற்றுள்ளாா்.

மாணவரை பள்ளி டிரஸ்டியான டிசிடபிள்யூ நிறுவனத் தலைவா் முடித்ஜெயின், மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் (நிதி) பி.ராமச்சந்தின், முதல்வா் ஆா். சண்முகானந்தன், துணை முதல்வா் எஸ். அனுராதா, தலைமையாசிரியா் இ. ஸ்டீபன் பாலாசிா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com