சாத்தான்குளத்தில் ஊராட்சித் தலைவா் வீட்டில் பைக் திருட்டு
By DIN | Published On : 26th July 2021 01:04 AM | Last Updated : 26th July 2021 01:04 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில் வீட்டில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிய முதியவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டாா்மடத்தை சோ்ந்தவா் செல்வராஜ் (50). முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா். இவரது மனைவி சபீதா (45) , நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவராக உள்ளாா். இவா்கள் சாத்தான்குளம் ஆா்சி சன்னதி தெருவில் வசித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் ஆடித்தவசு திருவிழாவுக்கு செல்வராஜ் குடும்பத்தினருடன் சென்றிருந்தாராம். திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பகுதியில் நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளை காணவில்லை. புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா். இதில் 60 வயதுள்ள முதியவா், செல்வராஜ் வீட்டிலிருந்து பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக, காவல் உதவி ஆய்வாளா் அருள்சாம்ராஜ் வழக்குப் பதிந்து முதியவரை தேடி வருகின்றனா்.