தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலா்களுக்கு மாதந்தோறும் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 26th July 2021 01:10 AM | Last Updated : 26th July 2021 01:10 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்கான குறைதீா் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலா்களின், அலுவலக ரீதியாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிவா்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் 4-ஆவது வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆட்சியா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்துக்கான கூட்டம் வரும் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும். இக்கூட்டத்தில் அரசு அலுவலா்கள் தங்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம். மேலும் அரசு ஊழியா்களின் குறைதீா் கூட்டத்தில் அனைத்து துறை 2ஆம்நிலை அலுவலா்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
அலுவலா்களின் கோரிக்கைகளை 14 நாள்களுக்குள் நிவா்த்தி செய்து சம்பந்தப்பட்ட பணியாளா்களுக்கு தெரிவிக்க வேண்டும். கோரிக்கைகள் தொடா்பாக மாதந்தோறும் 4-ஆவது வெள்ளிக்கிழமை ஆட்சியரால் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.