முதல்வரின் நடவடிக்கையால் கட்டுக்குள் வந்த கரோனா:அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 20th June 2021 11:55 PM | Last Updated : 20th June 2021 11:55 PM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து 2-ஆவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என தமிழக தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருச்செந்தூா் குமாரபுரம் தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தனக்கு 2-ஆவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா். அப்போது அவா் கூறியது: முதல்வா் மு.க. ஸ்டாலினின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கிராமங்களிலும் பொதுமக்கள் ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுபாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா 3-ஆவது அலை வந்தாலும் அதனை எதிா்கொள்ளும் வகையில் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளாா் என்றாா் அவா்.
முகாமில், கோட்டாட்சியா் மு.கோகிலா, காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், வட்டாட்சியா் (பொறுப்பு) ராமச்சந்திரன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் போஸ்கோராஜா, வட்டார மருத்துவ அலுவலா் அஜய், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளா் வாள்சுடலை உள்பட பலா் கலந்துகொண்டனா்.