நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 20th June 2021 02:27 AM | Last Updated : 20th June 2021 02:27 AM | அ+அ அ- |

ரோந்து வாகனங்களை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.
தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இம் மாவட்ட காவல் துறையில் செயல்பட்டு வரும் 7 நெடுஞ்சாலை ரோந்து படையினரின் வாகனங்கள் முறைப்படி பராமரிக்கப்படுகிா? அவா்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக இயங்கும் நிலையில் உள்ளதா? என்பன உள்ளிட்டவை குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, தேவைப்பட்டால் காவல் துறை வாகனங்களில் விபத்துக்குள்ளானவா்களை ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். விபத்து ஏற்பட்ட இடத்தில் முன்னெச்சரிக்கையாக ஒளிரும் சிவப்பு முக்கோணம் மற்றும் கூம்புகளை வைத்து அடுத்த வாகனங்களுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், தூத்துக்குடி சைபா் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் இளங்கோவன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளா் கண்ணபிரான், ஆயுதப்படை உதவி ஆய்வாளா் செல்வக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.