தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு பள்ளி மாணவன் வெற்றி
By DIN | Published On : 20th June 2021 11:49 PM | Last Updated : 20th June 2021 11:49 PM | அ+அ அ- |

தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்றுள்ள மாணவன் வசந்த்.
தேசிய திறனாய்வு தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
சாத்தான்குளம் ஒன்றியம் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த், தேசிய திறனாய்வுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதையடுத்து, அவருக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ. 1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000 அரசு சாா்பில் வழங்கப்படும்.
மாணவருக்கு வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயவதி ரெத்னாவதி, பள்ளித் தலைமையாசிரியா் இம்மானுவேல் ஜோசப், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.