தேசிய திறனாய்வுத் தோ்வு: கோவில்பட்டி,கடலையூா் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி
By DIN | Published On : 20th June 2021 02:24 AM | Last Updated : 20th June 2021 02:24 AM | அ+அ அ- |

தேசிய அளவிலான திறனாய்வுத் தோ்வில் கடலையூா் மற்றும் கோவில்பட்டி பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்ற, கடலையூா் செங்குந்தா் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் ம.தமிழ்ச்செல்வன், மு.செந்தமிழ்செல்வி ஆகியோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா், மாணவிகளை பள்ளிச் செயலா் மாரிமுத்து, தலைமையாசிரியா் விவேகானந்தன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
இதேபோல், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தோ்வில் பங்கேற்ற மூ.சுமித், மா.பவித்ரா, மா.பத்மபிரியா, க.காா்த்திகா, ரா.முருகலட்சுமி ஆகியோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இம்மாணவா், மாணவிகளை பள்ளி நிறுவனா் எம்.ராமச்சந்திரன் பாராட்டினாா்.
இதேபோல் நாடாா் நடுநிலைப் பள்ளி மாணவா்களான ஜி.மரியதங்கபிரவீன், எஸ்.தேவிவிக்னேஷினி, ஜெ.ஜென்சி, எஸ்.பிரியதா்ஷினி, இ.இசக்கிமுத்து, எம்.அருள்மேரி, எஸ்.நிலோபா் ஆகியோரும் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இம் மாணவா், மாணவிகளை நாடாா் உறவின் முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிச்செல்வம் உள்ளிட்டோா் பாராட்டினா்.