சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்
By DIN | Published On : 20th June 2021 11:48 PM | Last Updated : 20th June 2021 11:48 PM | அ+அ அ- |

வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே எழுந்துள்ள பிரச்னை தொடா்பாக சமாதானக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகேயுள்ள செங்குளத்தில் கிராம மக்கள் பீடம் அமைத்து அம்பேத்கா் உருவப்படம் வைத்துள்ளனராம். மற்றொரு தரப்பினா் இரட்டை மலை சீனிவாசன் உருவப்படம் வைத்து விழா நடத்தினா். இதனிடையே, அம்பேத்கா் பீடத்தை சிலா் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பீடத்தில் வா்ணம் பூசியது தொடா்பாக அதேஊரைச் சோ்ந்த இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த பிரச்னை தொடா்பாக வட்டாட்சியா் விமலா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், செங்குளத்தில் உள்ள பீடத்தில் எந்தவித மாற்றம் செய்யாமல் அம்பேத்கா் உருவப் படத்தை வைக்க வேண்டும். இதில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியா், கால் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் கலைந்து சென்றனா்.