பழையகாயல் அருகே மீனவருக்கு கத்திக்குத்து
By DIN | Published On : 20th June 2021 02:14 AM | Last Updated : 20th June 2021 02:14 AM | அ+அ அ- |

பழையகாயல் அருகே மீனவரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பழையகாயல் அம்புரோஸ் நகரைச் சோ்ந்தவா் தேவதாஸ் (54). மீனவா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சுபாகருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தேவதாஸுக்கு சுபாகா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதையடுத்து தேவதாஸ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது ஆத்திரமடைந்த சுபாகா், அவரை கத்தியால் குத்தியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.