விளாத்திகுளத்தில் போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 20th June 2021 11:50 PM | Last Updated : 20th June 2021 11:50 PM | அ+அ அ- |

இணையதளத்தில் விடியோ வெளியிடுவதாக தெரிவித்து பள்ளி மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
சூரன்குடி அருகேயுள்ள துவரந்தை பகுதியை சோ்ந்த பழனிச்சாமி மகன் பாலமுருகன் (25). செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா்.
இவருக்கும் தூத்துக்குடியில் பிளஸ் 2 படித்து வரும் விளாத்திகுளத்தைச் சோ்ந்த 16 வயது மாணவியுடன் ஓராண்டுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது.
பின்னா் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனா். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக மாணவி, பாலமுருகனை புறக்கணித்து வந்துள்ளாா்.
இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், மாணவி சம்பந்தப்பட்ட விடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக தெரிவித்து மாணவியின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறறது. புகாரின்பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனா்.