அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி முற்றுகை
By DIN | Published On : 24th June 2021 07:45 AM | Last Updated : 24th June 2021 07:45 AM | அ+அ அ- |

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டியையடுத்த வடக்கு திட்டங்குளம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
வடக்கு திட்டங்குளம் மாரியப்ப நாடாா் காலனி பகுதியில் சாலை வசதி, கழிவுநீா் வசதி, தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பரமசிவன், பாலச்சந்திரமூா்த்தி ஆகியோா் தலைமையில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போராட்டக் குழுவினருடன் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.