இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு
By DIN | Published On : 24th June 2021 07:42 AM | Last Updated : 24th June 2021 07:42 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 75 குடும்பங்களுக்கு 15 வகையான மளிகைப் பொருள்களை கனிமொழி எம்.பி. புதன்கிழமை வழங்கினாா்.
இந்த அகதிகள் முகாமில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட எம்.பி., தொடா்ந்து அந்தப் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அனைத்து உதவிகளும் உரிய அலுவலா்கள் மூலம் பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 75 குடும்பங்களுக்கு 15 வகையான மளிகைப் பொருள்களை எம்.பி. வழங்கினாா்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ், வசந்தா, மாப்பிள்ளையூரணி ஊராட்சித் தலைவா் சரவணகுமாா், அகதிகள் முகாம் தலைவா் செந்தில் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.