சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th June 2021 07:45 AM | Last Updated : 24th June 2021 07:45 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சிப் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும்; மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பூ.பாண்டி தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் மா.மாரியப்பன், துணைச் செயலா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நகர துணைச் செயலா்கள் வேல்முருகன், குரு, கழுகுமலை பொறுப்பாளா் செல்லப்பாண்டியன், கிளைச் செயலா்கள் சதீஷ், நிஷாந்த், அருள்பிரசாந்த், முகிலன், செண்பகப்பாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.