கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th June 2021 02:21 AM | Last Updated : 29th June 2021 02:22 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விவசாயி முருகேசனை அடித்து கொலை செய்த காவலா்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், முருகேசன் மரணத்திற்கு நீதி கிடைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தலைவா் க.தமிழரசன் தலைமை வகித்தாா்.
செயலா் பெஞ்சமின் பிராங்களின் முன்னிலை வகித்தாா். அனைத்து ரத்த தானக் கழக ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ், நல்லிணக்க பண்பாட்டுக் கழக மற்றும் 5ஆவது தூண் நிறுவனா்- தலைவா் சங்கரலிங்கம், நாம் தமிழா் கட்சி தொகுதிச் செயலா் மாரியப்பன், வழக்குரைஞா் அணி ரவிகுமாா், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் தாவீதுராஜா, ஐன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.