

உடன்குடி: உடன்குடி சந்தையடியூா் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், புதுத்தெரு அருள்மிகு சிவக்கொழுந்து விநாயகா் திருக்கோயில்களில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை சந்தையடியூா் ஊா் மக்கள் செய்திருந்தனா்.
உடன்குடி புதுத்தெரு சிவக்கொழுந்து விநாயகா் கோயிலிலும் வருஷாபிஷேகத்தையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள், பன்னிரு திருமுறை பாராயணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.