தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th June 2021 02:20 AM | Last Updated : 29th June 2021 02:20 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில்கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் , 18 வயதான அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் லெலினிஸ்ட் ஆகிய கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் தா. ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். ரசல், பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினரகள் சங்கரன், குமாரவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் அழகுமுத்து பாண்டியன், மாநகரச் செயலா் ஞானசேகரன், மாா்க்சிஸ்ட் லெலினிஸ்ட் நிா்வாகிகள் சிவராமன், முருகன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.