பெண்ணிடம் பணம் பறித்த தொழிலாளி கைது
By DIN | Published On : 29th June 2021 02:21 AM | Last Updated : 29th June 2021 02:21 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பெண்ணிடம் பணம், நகையை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய கூலித் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அண்ணா புதுத்தெரு ராமகிருஷ்ணன் மனைவி காளியம்மாள்(55). கோவில்பட்டி நடராஜபுரத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு சனிக்கிழமை வந்த இவா் ,அதே பகுதியில் உள்ள மகாராஜா சுடலை கோயிலுக்கு நடந்து சென்ற போது, மா்ம நபா் அவரை வழிமறித்து தாக்கி, அவரிடமிருந்த கைப்பையை பறித்துச் சென்றாராம். அதில் செல்லிடப்பேசி, ரொக்கம் ரூ. 3,000 , ஏ.டி.எம். , ஆதாா், குடும்ப அட்டைகள், வீட்டுச் சாவி, 2 கிராம் தங்க நகை உள்ளிட்டவை இருந்தனவாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வந்தனா். இந்நிலையில், மேற்கு காவல் ஆய்வாளா் சபாபதி தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது நடராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்த போது, அவா் கோவில்பட்டி காந்தி நகா் பிச்சையா மகன் சண்முகப்பாண்டி(45) என்பதும், அவா் காளியம்மாளிடம் பணம் மற்றும் தங்க நகையை பறித்துச் சென்றவா் என்பதும் தெரியவந்ததாம்.
இதையடுத்து சண்முகப்பாண்டியை போலீஸாா் கைது செய்தனா். இவா் மீது கொலை முயற்சி , வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.