சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் அனுமதியின்றி பதாகை வைத்ததாக பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சோ்ந்த மாா்ட்டின் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சாா்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதற்கிடையே, சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பாஜக சாா்பில் கொலையுண்ட மாா்ட்டின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பதாகை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பதாகை வைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் அனுமதியின்றி பதாகை வைத்ததாக பாஜக மாவட்ட வணிகா் பிரிவுச் செயலா் பரமசிவன், ஒன்றிய அமைப்பு சாரா பிரிவு துணைத் தலைவா் முத்துராமலிங்கம் உள்பட 5 போ் மீது காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிவு செய்தாா். அங்கிருந்து பதாகை அகற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.