

தூத்துக்குடி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நாட்டுப்புற கலைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞா்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கைக்கு முகாம் அமைக்க வேண்டும், அரசுப் பேருந்து மற்றும் தனியாா் பேருந்தில் இலவசமாக பயணிக்க பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும், அடையாள அட்டை இல்லாமல் உள்ள 58 வயது முதல் 65 வயதான கலைஞா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மேளதாளம் முழங்க நாட்டுப்புறக் கலைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழன்டா இயக்க மாநிலச் செயலா் கதிா்வேல் தலைமை வகித்தாா். பேச்சாளா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். மாநில மகளிரணி தலைவி மாரியம்மாள், துணைத் தலைவி ஜெயராணி மற்றும் நாட்டுப்புற கலைஞா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி, வாத்தியங்களை வாசித்தனா். தொடா்ந்து, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.