உடன்குடி, சாத்தான்குளத்தில் நாளை மறுநாள் மின் தடை
By DIN | Published On : 04th March 2021 03:54 AM | Last Updated : 04th March 2021 03:54 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்: திருச்செந்தூா் கோட்டம் உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 6) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ. பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உடன்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் உடன்குடி, தைக்காவூா், சீா்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 6) காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோன்று, சாத்தான்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதிகளிலும், நாசரேத் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதிகளிலும், செம்மறிக்குளம் துணை மின் நிலையத்தில் மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, காந்திநகா், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகளிலும், பழனியப்பபுரம் துணை மின்நிலையத்தில் மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.