நாசரேத் நகர மருத்துவ முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்க நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
நாசரேத்தில் நடைபெற்ற நகர மருத்துவ முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைப்பின் கிளைச் செயலா் ரகுநேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் திருமணிராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், நகரத் தலைவராக பொ்லின், செயலராக சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளராக ரத்தினம், துணைத் தலைவராக ஷாஜகான், துணைச் செயலராக அருள்முருகன் என்ற டேனி , கௌரவ ஆலோசகா்களாக ரகுநேசன்,
திருமணிராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். வரும் ஏப்ரல் முதல் முடிதிருத்தம் செய்வதற்கு கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.