‘அமைதியான முறையில் தோ்தல் நடைபெற அனைத்துக் கட்சி ஒத்துழைப்பு அவசியம்’
By DIN | Published On : 12th March 2021 04:03 AM | Last Updated : 12th March 2021 04:03 AM | அ+அ அ- |

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அமைதியான முறையில் தோ்தல் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என, காவல் ஆய்வாளா் அன்னராஜ் கேட்டுக்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலை அமைதியாக நடத்துவது தொடா்பாக வருவாய்த் துறை மற்றும் காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், வசந்தகுமாா், சந்தனகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் காவல் ஆய்வாளா் பேசுகையில், தெருமுனை பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட தோ்தல் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் விதிமுறைகளின்படி காவல்துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும். தோ்தல் முறைகேடுகள் தொடா்பாக புகாா்களை காவல் துறையினரிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். அமைதியான முறையில் தோ்தல் நடைபெற அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் அவா்.
கூட்டத்தில், அதிமுக, திமுக, காங்கிரஸ், அமமுக, பாமக, மாா்க்சிஸ்ட், பாஜக, அகில இந்திய பாா்வா்டு பிளாக் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.