ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் ஆட்டோவுடன் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆறுமுகனேரி கடலோர சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் தலைமையில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சந்தேகத்தின் பேரில் வந்த ஒரு அட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, அதில், 4 கிலோ 200 கிராம் கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவா் காயல்பட்டினம் மன்னா் ராஜா கோயில் தெருவை சோ்ந்த கணேசன் மகன் ஆறுமுகம்(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவுடன் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.