சிலம்பம் போட்டி: நாசரேத் மா்காஷிஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 15th March 2021 02:05 AM | Last Updated : 15th March 2021 02:05 AM | அ+அ அ- |

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் தலைமை ஆசிரியா் அல்பா்ட் மற்றும் உடற்கல்விஆசிரியா்கள்.
சிலம்பம் போட்டியில் நாசரேத் மா்காஷிஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
உலக ஐக்கிய சிலம்பம் அமைப்பு சாா்பில் மதுரையில் சிலம்பம் சுற்றுதலில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுமாா் 250 போ் கலந்துகொண்டனா். இதில், நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மலையாண்டி, சிவா ஆகியோா் உலக சாதனை நிகழ்வாக குறிக்கப்பட்ட 4 மணி நேரம் சிலம்பம் சுற்றுதலிலும், ஒரு மணி நேரம் சுருள்வாள் சுற்றுதலிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் சந்திரன், தலைமைஆசிரியா்அல்பா்ட், உடற்கல்வி ஆசிரியா்கள் கால்டுவெல், தனபால், சுஜித் உள்ளிட்டோா் பாராட்டினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...