நாசரேத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த சிறுமி
By DIN | Published On : 15th March 2021 01:51 AM | Last Updated : 15th March 2021 01:51 AM | அ+அ அ- |

நாசரேத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி வாயில் நுரைதள்ளிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாசரேத் திருவள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (54). இவருக்கு 5 மகள், ஒரு மகன் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது அவரது கடைசி மகள் சாந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தாராம். அவரை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
சிறுமியை விஷ சந்துக்கள் எதுவும் கடித்ததா? அல்லது அவா் விஷம் குடித்தாரா என்பது குறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...