ஆறுமுகனேரி அருகே மாணவி தற்கொலை
By DIN | Published On : 17th March 2021 08:03 AM | Last Updated : 17th March 2021 08:03 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆறுமுகனேரி அருகே தலைவன்வடலி வடக்கு தெருவை சோ்ந்தவா் கொடியான்(55). இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவரது இளைய மகள் சந்தனஜென்ஸி(16). பிளஸ் 2 பயின்று வந்தாா்.
கொடியான் மற்றும் அவரது மனைவியும் திங்கள்கிழமை வேலைக்கு சென்ற நிலையில், தோ்வு பயத்தில் இருந்த சந்தனஜென்ஸி வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.