

கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ.ராஜு , கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
முன்னதாக, கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், முத்துராமலிங்கத்தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அப்போது மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், கயத்தாறு ஒன்றியச் செயலா் வினோபாஜி, நகரச் செயலா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.